உலக சுகாதார சபை தீர்மானங்கள்
விஷன் 2020 இன் சிறப்பம்சங்கள் மற்றும் மரபு
எங்கள் கண் சிகிச்சை குழுவை சந்திக்கவும்
உங்கள் கண் ஆரோக்கியம் முதன்மையானது.
நீரிழிவு சார்ந்த கண் நோ இலங்கை முழுவதிலும் உள்ள வல்லுநர்களின் குழு, பொது மற்றும் தனியார் கண் சுகாதார மையங்கள் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க ஒன்றிணைந்துள்ளது. பலதரப்பட்ட நபர்களை குழு உறுப்பினர்களாக சேர்ப்பதற்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் மரியாதைக்குரிய மற்றும் சமமான வாய்ப்பைப் பெறக்கூடிய ஆதரவானதும் சாதகமானதுமான சூழலை வளர்ப்பதற்கும் நாங்கள் தீவிரமாகச் செயல்படுகிறோம்.
கண்போர்ளவளயப் போதுகோே்ேல் மற்றும் பமம்படுே்துேல் பற்றி பநோயோைிகளுக்கு விைக்கமைிே்ேல் முேன்ளமயோன கண் பரோமரிப்பு பசளவகைில் ஒன்றோகும். முழுளமயோன கண் பரிபசோேளன ஒன்றுடன் போர்ளவளயப் போதிக்கக்கூடிய அறிகுறியற்ற கண் பநோய்களை இனங்கோணுவேற்கோன (பநோய்களுக்கோன நீரிழிவு தரட்டிடனோப ி ஸ் கிரீனிங் ) பரிபசோேளனகை் நளடசபறும்
நீரிழிவு தடுப்புக்கான எங்கள் அணுகுமுறை
எங்கள் பொதுவான பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். அனைவருடனும் இணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே எங்கள் நோக்கை அடைய முடியும் என்பதை நாங்கள் நன்கறிவோம் . இச்செய்யற்றிட்டம் குருட்டுத்தன்மையை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும், தனிநபர்களும், தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய குருட்டுத்தன்மையை அகற்றுவதற்கான பொதுவான இலக்கை அடைய ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வழியில் செயல்பட உதவும்.
நீரிழிவு சார்ந்த கண் விழித்திரைப் பாதிப்பு( டையபெடிக் ரெடினோபதி ) க்கான கண் பரிசோதனையின் படிகள் என்ன?
பார்வைச் சரிபார்ப்பு: ஒளிவிலகல் (கண்ணாடி மூலம் பார்வையை மேம்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பது) விழித்திரைப் பரிசோதனையில் (நீரிழிவு சார்ந்த கண் விழித்திரைப் பாதிப்பு/ டையபடிக் ரெட்டினோபதியில்) ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உங்கள் கண்ணின் உட்புறத்தை ஆய்வு செய்தல்…
நீரிழிவு நோய்க்கு எதிரான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தாலும், உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவலாம். நீங்கள் நீரிழிவு நோயுள்ள பெற்றோரின் சந்ததியாக இருந்தால்...
குறை பார்வை உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கும்?
குறைந்த பார்வை என்றால் என்ன? நாம் வயதாகும்போது, நம் பார்வை மோசமடையத் தொடங்குவதை நாம் கவனிக்கலாம். அதனால்தான் உங்கள் கண் பராமரிப்பு நிபுணரை தவறாமல் பார்ப்பது முக்கியம், எனவே அவர்கள்…
அவசரநிலை உள்ளதா?
Possible cause /consequence -
Vascular occlusions (blocked blood vessel in the eye )
What you should do? -
Check blood pressure
Lie with head low and use your finger to do a gentle eye massage -press over closed lids while counting to 3 and release . Repeat this while transport is being arranged to see an eye surgeon.
Possible cause /consequence -
Vitreous hemorrhage
What you should do?
Arrange for an eye consultation, even if the floaters decrease in intensity
Possible cause /consequence -
Ulceration of cornea
What you should do? -
Need to have an eye consultation urgently, as there is a risk of serious infection even if the injury is trivial in diabetic patients
Possible cause /consequence -
Nerve palsy
What you should do?
Although this can be due to blocking of a small blood vessel in the nerve which resolve with time, more dangerous causes need to be excluded.
( like rupture of a dilated blood vessel in the brain, or fungal infection in the eye cavity which can spread to the brain soon)
செய்திகள் & அறிவிப்புகள்
எங்கள் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு விழிப்புணர்வு, க்ளினிக்குகள் மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களை இதன் மூலம் பெறலாம். இங்கே கிளிக் செய்தால் வலைப்பதிவிற்கு அழைத்துச் செல்லும்.
நீரிழிவு சார்ந்த கண் விழித்திரைப் பாதிப்பு (டயபடிக் ரெட்டினோபதி) என்றால் என்ன?
நீரிழிவு நோயைப் பற்றி கண்ணின் தன்மை தொடர்பாக படிப்பதில் எங்கள் திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது. சர்க்கரை நோய் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீரிழிவு என்பது ஒரு நீண்டகால நோயாகும், இது சதையியால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும் போது ஏற்படும்.
இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமலோ அல்லது திறம்பட பயன்படுத்தப்படாமலோ, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்கிறது (இது ஹைப்பர் கிளைசீமியா என அழைக்கப்படுகிறது). நீண்ட காலமாக, குருதியின் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பது உடலிற்கு சேதம் மற்றும் பல்வேறு உறுப்புகள் மற்றும் இழையங்களின் செயலிழப்புடன் தொடர்புடையது.
பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்பு, இதன் விளைவாக பார்வை புலன் இழப்பு ஏற்படுகிறது, இது க்ளோகோமா எனப்படும் நாள்பட்ட, முற்போக்கான கண் நோய்க்குக் காரணமாகும் . .
க்ளோகோமா நோயில் பார்வை நரம்பு படிப்படியாக சேதமடைந்து காட்சிப்புலம் படிப்படியாக்குன்றி இறுதியில் முழுமையாகப்பார்வையை இழக்கலாம். கண்ணில் நீர்மயவுடனீர் குவிந்து, கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும் போது இது ஏற்படுகிறது.
சதையி இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது உணவில் இருந்து குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் நுழைய அனுமதிக்கும் திறவுகோலாக செயல்படுகிறது, அங்கு அது சக்தியை உருவாக்க பயன்படுகிறது. மாச்சத்து உள்ள அனைத்து உணவுகளும் இரத்தத்தில் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. இன்சுலின் செல்கள் குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மனிதர்களில் உள்ள INS மரபணு, சதையித் தீவுகளின் பீட்டா செல்களால் உருவாக்கப்படும் பெப்டைட் ஹார்மோனான இன்சுலினை உருவாக்க ஏதுவாகிறது.
விழித்திரை என்பது கண்ணின் உள் படலம் ஆகும், இது ஒளியை உறிஞ்சி ஒளி தூண்டுதல்களை உருவாக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பார்வை நரம்பின் ஊடாக மூளைக்கு அனுப்பப்படுகிறது. விழித்திரை என்பது அதிக அளவு ஆக்ஸிஜனை பயன்படுத்திடும் மிகவும் செயற்பாட்டுத்திறன் கொண்ட இளையம் ஆகும். எனவே இது ஆரோக்கியமாணவர்களில் வளமான குருதியோட்டத்தைக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோயில், அதிக இரத்த சர்க்கரையின் நீண்டகால நிலவுகை விழித்திரை நுண்குருதிக்குழாய்களை சேதப்படுத்தும். நுண்குருதிக்குழாய்களின் உள் அடுக்கு, அதாவது அடித்தள சவ்வு தடிமனாகி அடைப்புக்கு வழிவகுக்கும். மேலும் படிக்கவும்
கீழே உள்ள பதிவு பொத்தானைக் கிளிக் செய்து உங்கள் தகவலைச் சரியாக வழங்குவதன் மூலம் எங்கள் vision2020 திட்டத்தில் நீங்கள் பதிவு செய்யலாம். பதிவு முடிந்ததும், செயல்முறை முடிந்தது எனக்கூறும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். அதன் பிறகு, நீங்கள் பதிவு செய்யும் போது நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தளத்தில் உள்நுழையலாம். எங்களால் வழங்கப்பட்ட உள்ளக தளத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவிக்கலாம். இங்கே கிளிக் செய்யவும் உங்களைப் பதிவு செய்வதற்கு
இந்த உள் தளம் பொதுமக்களுக்குத் திறக்கப்படவில்லை மற்றும் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே அணுகக்கூடியது. நீங்கள் இதில் கேட்க்கும் பிரச்சனைகளுக்கான பதில்கள் எங்கள் ஒருங்கிணைப்பாளர்களால் வழங்கப்படும். உங்கள் தனிப்பட்ட குறுந்தகவல்களுக்கு பதில் குறுந்தகவல்களை அனுப்புவதற்கான தனி வசதியும் எதிர்காலத்தில் வழங்கப்படும்.