Vision 2020 | Diabeticeye.lk

நீரிழிவு சார்ந்த கண் விழித்திரைப் பாதிப்பு( டையபெடிக் ரெடினோபதி ) க்கான கண் பரிசோதனையின் படிகள் என்ன?

  1. பார்வை சோதனை
  2. ஒளிவிலகல் (கண்ணாடி மூலம் பார்வையை மேம்படுத்த முடியுமா என்பதைப் பார்த்தல் )
  3. கண் மணியை விரித்து விழித்திரையை அவதானிக்கும் பரிசோதனை (டயபெடிக் ரெட்டினோபதி மாற்றங்களக் கண்டறிய உங்கள் கண்ணின் பின்புறத்தை ஆய்வு செய்தல்)
  4. கண்ணின் உள் அழுத்தத்தை பரிசோதனை செய்தல்

டயபெடிக் ரெட்டினோபதி பரிசோதனைக்காக உங்கள் கண்மணி விரிக்கப்படுவது ஏன் ??

சாதாரண கண்மணியூடாக விழித்திரையின் ஒரு சிறிய வரையறுக்கப்பட்ட (மஞ்சள் வட்டங்கள்) பகுதியையே பார்வையிட முடியும். டயபெடிக் ரெட்டினோபதி, ரத்தக்கசிவுகள் (நீல அம்பு) மற்றும் புதிய குருதிக்களன்கள் (பச்சை அம்பு) ஆகியவற்றை அவதானிக்க விரிவாக்கப்பட்ட கண் பரிசோதனை அவசியமாகும்.

எனவே, விரிவாக்கப்பட்ட கண் பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளுங்கள் !!

ஆனால் கண்மணியை விரிவாக்குவதால் தற்காலிகமாக பார்வை மங்கலாகிறது. குறிப்பாக நீங்கள் வாகனம் ஓட்டினால், வீடு திரும்ப உங்கள் பார்வை தெளிவு குறைவாக இருக்கலாம்.

ஆகவே, உங்களை கவனமாக வீட்டிற்கு அழைத்த ஒருவரை உங்களுடன் அழைத்து வர வேண்டும் .

சில மையங்களில் டயபெடிக் ரெட்டினோபதிக்கான கண் பரிசோதனை கண்மணி விரிக்கப்படாமல் ஒரு விஷேட கேமரா ( non mydriatic fundus camera ) மூலம் பரிசோதிக்கப் படுகின்றது . இந்த முறை இலங்கையில் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.
தமிழ்