Vision 2020 | Diabeticeye.lk

நீரிழிவினால் ஏற்படும் விழிவெண்படல பாதிப்பு

கண்ணோடு தொடர்பாக நீரிழிவு நோயைப் படிப்பது தொடர்பாக எங்கள் திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.

நீரிழிவு நோயினால் ஏற்படும் விழிவெண்படலப் பாதிப்பு (நீரிழிவு ரெட்டினோபதி) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

விழித்திரை என்பது கண்ணின் உள் படலம் ஆகும், இது ஒளியை உறிஞ்சி ஒளி தூண்டுதல்களை உருவாக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பார்வை நரம்பின் ஊடாக மூளைக்கு அனுப்பப்படுகிறது. விழித்திரை என்பது அதிக அளவு ஆக்ஸிஜனை பயன்படுத்திடும் மிகவும் செயற்பாட்டுத்திறன் கொண்ட இளையம் ஆகும். எனவே இது ஆரோக்கியமாணவர்களில் வளமான குருதியோட்டத்தைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயில், அதிக இரத்த சர்க்கரையின் நீண்டகால வெளிப்பாடு விழித்திரை குருதி நுண்குழாய்களை சேதப்படுத்தும். குருதி நுண்குழாய்களின் உள் அடுக்கு, அதாவது அடித்தள சவ்வு தடிமனாகி அடைப்புக்கு வழிவகுக்கும். குருதி நுண் குழாய்களின் உள் சவ்வைச் சுற்றியுள்ள பெரிசைட்டுகள் ,சுருக்கத்தை ஏற்படுத்தும் செல்கள் எண்ணிக்கையில் குறைவதால், நுண்குழாய்கள் விரிவடையும் (மைக்ரோஅனுரிஸம்)  பின்னர் சிதைவு (புள்ளி இரத்தக்கசிவு) ஏற்படுகிறது. பலவீனமான குருதி நுண் குழாய்களின் உள் சவ்வு கொழுப்பு நிறைந்த திரவத்தை விழித்திரையில் வெளியேற்ற அனுமதிக்கின்றன.(கடினமான கொழுப்பு படிவு)

இந்த மாற்றங்கள் DR இன் புதிய குருதிக்குழாய்கள் வளர்ச்சி அடையாத நிலைகளில் நிகழ்கின்றன. மாற்றங்களின் தீவிரம் மற்றும் விழித்திரையில் அவற்றின் விநியோகம் ஆகியவற்றைப் பொறுத்து லேசான, மிதமான அல்லது கடுமையான விழித்திரை பாதிப்பு நிலைகள் உள்ளன.   

நோய் அதிகரிக்கும் போது மற்றும் விழித்திரை திசுக்களின் குறிப்பிடத்தக்க பகுதி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சேதமடயும் போது அந்த திசுக்கள் புதிய குருதிக் குழாய்களின் வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களை வெளியிடுகின்றன. சேதமடைந்த பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்கான முயற்சியாக இது கருதப்படலாம். ஆனால் இந்த குருதிக்குழாய்கள் எதிர்பார்த்த கடமையை நிறைவேற்றுவதில்லை. அதற்கு பதிலாக, அவை விழித்திரையில் செங்குத்தாக வளர்ந்து கண்ணினுள் உள்ள கண்ணாடியுடநீர் / ஜெல்லில் வளரும். இவை உடையக்கூடியவை ஆகையால் விழித்திரை அல்லது கண்ணாடியுடைநீரில் இரத்தம் கசிந்து பார்வைக்கு இடையூறு ஏற்படுத்துகிறது மற்றும் சில சமயங்களில் குறிப்பிடத்தக்க பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கூறிய மாற்றங்களோடு அல்லது இல்லாமல் சில நபர்களில் விழித்திரையின் மையப் பகுதி பாதிக்கப்படும் முக்கிய பகுதியாக மாறும். மாகுலா எனப்படும் இந்த மையப் பகுதி/ மஞ்சள் பொட்டு வீக்கமடைகிறது, இதனால் படங்கள் சிதைந்தது போல புலப்படும். இது நீரிழிவு மாகுலர் இடீமா என்று அழைக்கப்படுகிறது.

vision 2020 sri lanka

நீரிழிவு ரெட்டினோபதியின் நிலைகள் என்ன?

நீரிழிவு ரெட்டினோபதி பொதுவாக புதிய குருதிக்க் குழாய்கள் உருவாகாத நிலைகளின் போது அறிகுறிகளை ஏற்படுத்தாது, எனவே அதைக் கொண்டிருப்பது சாத்தியமாகும் மற்றும் அதை அறியாமல் இருக்கலாம். இந்த நிலைகளில் இரத்த குழாய்கள் எப்போதும் கசிவதில்லை என்பதே இதற்குக் காரணம். நீரிழிவு ரெட்டினோபதி என்பது இரண்டு வகை மற்றும் நான்கு நிலைகளால் வகைப்படுத்தப்படும் ஒரு தொடர்ச்சியாக மோசமடையக்கூடிய கண் நோயாகும்.

நீரிழிவு ரெட்டினோபதி (DR) என்றால் என்ன?

விழித்திரை என்பது கண்ணின் உள் படலம் ஆகும், இது ஒளியை உறிஞ்சி ஒளி தூண்டுதல்களை உருவாக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பார்வை நரம்பின் ஊடாக மூளைக்கு அனுப்பப்படுகிறது. விழித்திரை என்பது அதிக அளவு ஆக்ஸிஜனை பயன்படுத்திடும் மிகவும் செயற்பாட்டுத்திறன் கொண்ட இளையம் ஆகும். எனவே இது ஆரோக்கியமாணவர்களில் வளமான குருதியோட்டத்தைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயில், அதிக இரத்த சர்க்கரையின் நீண்டகால வெளிப்பாடு விழித்திரை குருதி நுண்குழாய்களை சேதப்படுத்தும். குருதி நுண்குழாய்களின் உள் அடுக்கு, அதாவது அடித்தள சவ்வு தடிமனாகி அடைப்புக்கு வழிவகுக்கும். குருதி நுண் குழாய்களின் உள் சவ்வைச் சுற்றியுள்ள பெரிசைட்டுகள் ,சுருக்கத்தை ஏற்படுத்தும் செல்கள் எண்ணிக்கையில் குறைவதால், நுண்குழாய்கள் விரிவடையும் (மைக்ரோஅனுரிஸம்) பின்னர் சிதைவு (புள்ளி இரத்தக்கசிவு) ஏற்படுகிறது. பலவீனமான குருதி நுண் குழாய்களின் உள் சவ்வு கொழுப்பு நிறைந்த திரவத்தை விழித்திரையில் வெளியேற்ற அனுமதிக்கின்றன.(கடினமான கொழுப்பு படிவு)

இந்த மாற்றங்கள் DR இன் புதிய குருதிக்குழாய்கள் வளர்ச்சி அடையாத நிலைகளில் நிகழ்கின்றன. மாற்றங்களின் தீவிரம் மற்றும் விழித்திரையில் அவற்றின் விநியோகம் ஆகியவற்றைப் பொறுத்து லேசான, மிதமான அல்லது கடுமையான விழித்திரை பாதிப்பு நிலைகள் உள்ளன.

நோய் அதிகரிக்கும் போது மற்றும் விழித்திரை திசுக்களின் குறிப்பிடத்தக்க பகுதி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சேதமடயும் போது அந்த திசுக்கள் புதிய குருதிக் குழாய்களின் வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களை வெளியிடுகின்றன. சேதமடைந்த பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதற்கான முயற்சியாக இது கருதப்படலாம். ஆனால் இந்த குருதிக்குழாய்கள் எதிர்பார்த்த கடமையை நிறைவேற்றுவதில்லை. அதற்கு பதிலாக, அவை விழித்திரையில் செங்குத்தாக வளர்ந்து கண்ணினுள் உள்ள கண்ணாடியுடநீர் / ஜெல்லில் வளரும். இவை உடையக்கூடியவை ஆகையால் விழித்திரை அல்லது கண்ணாடியுடைநீரில் இரத்தம் கசிந்து பார்வைக்கு இடையூறு ஏற்படுத்துகிறது மற்றும் சில சமயங்களில் குறிப்பிடத்தக்க பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கூறிய மாற்றங்களோடு அல்லது இல்லாமல் சில நபர்களில் விழித்திரையின் மையப் பகுதி பாதிக்கப்படும் முக்கிய பகுதியாக மாறும். மாகுலா எனப்படும் இந்த மையப் பகுதி/ மஞ்சள் பொட்டு வீக்கமடைகிறது, இதனால் படங்கள் சிதைந்தது போல புலப்படும். இது நீரிழிவு மாகுலர் இடீமா என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவினால் ஏற்படும் விழிவெண்படல பாதிப்பின் நிலைகள்

vision 2020 sri lanka
தமிழ்